Sunday, 18 October 2020

12 நாட்கள் நடந்த டெஸ்ட் போட்டி

     5 நாட்கள் பார்ப்பதற்கே சோம்பல் படும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆரம்ப காலத்தில், இத்தனை நாட்கள் தான் விளையாட வேண்டும் என்றோ அல்லது இத்தனை பந்துகள் தான் வீசப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட வில்லை.

     இரு அணிகளும் முடிவு கிடைக்கும் வரை விளையாட வேண்டும் என்பது தான் கிரிக்கெட் விளையாட்டின் விதி. அப்படி 1939 ஆம் ஆண்டு டர்பன் நகரில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெற்றது.

     இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி தான் கிரிக்கெட் வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்றதாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இரண்டு ஓய்வு நாட்கள் மற்றும் ஒரு நாள் மழையால் கைவிடப்பட்டு, மொத்தம் 43 மணி நேரமும், 1981 ஓட்டங்கள் பெறப்பட்டு, 5447 பந்துகள் வீசப்பட்டன. 

     இருந்தாலும் கூட இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல இருந்த கப்பல் புறப்பட வேண்டி இருந்ததால், ஆட்டம் பாதியில் நிறுத்திவிட்டு, விளையாட்டு வீரர்கள் கப்பலை பிடிக்க ஓடியதே போட்டி முடிவுக்கு முடிவதற்கு காரணம்.

No comments:

Post a Comment