Thursday, 15 October 2020

செத்து பிழைத்த சீதா பாட்டி

     இது பல ஆண்டுகளுக்கு முன்னாள் நடந்ததாக கூறப்படும் சம்பவம். சீதா லட்சுமி என்ற வயதான பெண்மணி தஞ்சையில் வசித்து வந்தார். வயதானாலும் கூட தன்னுடைய வேலைகளை தானே செய்ய வேண்டும் என்று வைராகிக்கிய உணர்வு உடையவர். அப்படி தான் அன்றும் சமையலுக்காக கிணற்றடியில் நீர் இறைத்து கொண்டிருந்தார். தண்ணீரை குடத்தில் ஊற்றி அதை எடுத்துக்கொண்டு வரும் போது கால் வழுக்கிக் கீழே விழுந்து விடடார். அவ்வளவு தான் அவருடைய உயிர் அங்கேயே பிரிந்துவிட்டது.

   அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அலுவலகம் சென்றிருந்த அவரது மகனுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவரும் அன்னையின் உடல் கண்டு கலங்கினார். கண்ணீர் விட்டு அழுதார். அந்த தாய்க்கு மிளகு ரசம் என்றால் மிகவும் பிடிக்கும். மகனாகிய அவரும் விரும்பி சாப்பிடுவாராம். சமையல் அறையில் மிளகு ரசத்தை வைத்து விட்டு சோறு வைக்க தண்ணீர் எடுத்து வரும் நேரத்தில் அந்த தாய் இறந்துவிட்டார். இதை அறிந்த மகன் சமையல் அறைக்குள் சென்று, ஒரு கின்னத்தில் அந்த ரசத்தை எடுத்துவந்தார். அழுது கொண்டே அன்னையின் வாயை துறந்து மிளகு ரசத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றினார். 

   அழுகையிலும், அரற்றிலிலும் சில நிமிடங்கள் சென்றன. திடீரென அந்த வயதான பெண்மணி, "கர் , புர்" என்ற பயங்கர சத்தத்துடன் இருமி வாயை திறந்து எதோ சத்தமிட்டுக்கொண்டே கண்விழித்தார்.

     அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி + ஆச்சரியம். ஏதேனும் பேய் தான் உடலில் புகுந்துகொண்டு விட்டதோ என்று சில பேர் அலறிக்கொண்டு ஓடினர் . சில மணி நேரங்கள் அந்த பெண்மணி அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்தாராம். மகன் அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்க, அந்த அம்மா அதற்கு, "நான் கிணத்து அடியில் வழுக்கி விழுந்துவிட்டேன். உடனே எனக்கு உயிர் போய்விட்டது. என்னை யாரோ இருவர் ங்கேயோ அழைத்துக்கொண்டு போனார்கள். ஒளி மாதிரி எதோ ஒன்று பெரிதாக தெரிந்தது. அங்கு ஏதேதோ பேச்சு குரல் கேட்டது. திடீரென ஒரு குரல் "அதற்குள் இவளை ஏன் அழைத்துக்கொண்டு வந்தாய்! உடனே அனுப்பிவிடு" என்று சொன்னது. உடனே எனக்கு அருசி சாதம் இரு ருக்கையும், ஒவ்வொரு அரிசியும் மிகவும் நீளம், அது போன்ற அருசி நான் பார்த்தே இல்லை, கொஞ்சம் கீரையும் கொடுத்து உண்ணச் சொன்னார்கள். நான் உண்ட பின் மலை மாதிரி இருக்கும் இடத்தில் இருந்து என்னை எங்கையோ உருட்டி விட்டார்கள். கண்விழித்து பார்த்த போது நான் நம் வீட்டில் படுத்து கொண்டிருந்தேன். அப்போது தான் நான் இறந்து பிறகு மீண்டும் உயிர்பெற்று இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டேன்"  என்று சொல்லியிருக்கிறார். 

   அதன் பின் பல வருடங்கள் உயிர் வாழ்ந்த அந்த முதிய பெண்மணி, மீண்டும் ஒருநாள் அதே கிணற்றடியில் வழுக்கி விழுந்து தான் உயிரிழந்தார் என்பது ஆச்சரியத்தின் உச்சம்.

No comments:

Post a Comment