Thursday, 26 November 2020

அனைத்து பெண்களுக்கும் நாப்கின்களை இலவசமாக வழங்கும் நாடு

     உலகின் முதல் நாடாக தனது நாட்டு பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை இலவசமாக அளிக்க உள்ளதாக சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் உலக வரலாற்றில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த சட்டம் 24 நவம்பர் 2020 அன்று நிறைவேற்றபட்டது.

     ஸ்காட்லாந்து சட்டமன்றத்தில் புதிதாக சட்டம் ஓன்று நிறைவேற்ற பட்டது. இந்த சட்டத்தில் இலவசமாக கொடுக்க கூடிய பொருட்களின் வருசையில் நாப்கினையும் சேர்த்துள்ளது. பொது இடங்களில், யூத் க்ளப், சமூக கூடங்களில் மற்றும் மருந்தகங்களில் இனிமேல் பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை இலவசமாக பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி கட்டுவோரின் பங்களிப்பில் இருந்து ஆண்டுக்கு சுமார் 24 மில்லியன் பவுண்ட்கள் இதற்காக ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த தொகை இந்திய மதிப்பில் 236 கோடி ரூபாய் ஆகும்.

   இந்த தீர்மானம் ஸ்காட்லாந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றபட்டுள்ளது. ஸ்காட்லாந்து மினிஸ்டர் நிகோலா, இந்த பாலிசி பெண்களுக்கு மிகவும் முக்கயமானது என்று கூறி இருந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சட்டத்தை நிறைவேற்றும் உலகின் முதல் நாடு ஸ்காட்லாந்து என்பதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார். இனிமேல் ஸ்காட்லாந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் கவலைப்பட தேவையில்லை, இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம் என்று ஸ்காட்லாந்து தலைவர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

     ஆனால், கடந்த 2018 ல் இருந்து ஸ்காட்லாந்து அரசு பள்ளி, கல்லுரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு இலவச நாப்கின்கள் அளித்து வருகிறது. இந்த வகையில் ஸ்காட்லாந்து உலகின் முதல்நாடாக இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

     பிரிட்டனில் 10 சதவித பெண்கள் நாப்கின் பொருட்கள் வாங்க போதிய பெருளாதார வசதி இன்றி அவதிபடுவதாக குறிபிடுகின்றனர். கடந்தாண்டு வரையிலும், இந்தியாவில் வெறும் 57% பெண்கள் தான் மாதவிடாய் நாட்களில் நாப்கின்கள் பயன்படுத்துகிறார்கள் என ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கின்றன. நகர்புற பெண்கள் 77 சதவீதமும், கிராமப்புற பெண்கள் 48.5 சதவீதம் பேர் தான் நாப்கின் பயன்படுத்துவதாக அறியபடுகிறது.

     இந்தியாவிலும் இந்த சட்டத்தை ஸ்காட்லாந்து போல ஒரு மனதாக நிறைவேற்றினால், இந்தியாவில் கோடிக்கணக்கான மகள்கள் அந்த மூன்று நாட்களில் நிம்மதியாக இருப்பார்கள்.

No comments:

Post a Comment