அந்த வகையில் சமிபத்தில் நடத்தப்பட்ட
ஆராய்ச்சியின் மூலம் ஒரு மாத்திரையை கண்டுபித்து உள்ளனர். இந்த மாத்திரையை
சாப்பிட்டால் மனிதர்களால் கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என்று கூறுகின்றனர். அது
மட்டும் இல்லாமல் செயல் இழந்து போன உடல் உறுப்புகளை கூட மறுபடியும் இந்த மாத்திரை
செயல்பட வைக்கும் என்றும் கூறுகின்றனர். இந்த மாத்திரையை கண்டுப்டித்தது யாரு
என்றால் ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் பேராசிரியர் டேவிட் சிங்களர் மற்றும்
ஆஸ்திரேலியாவில் உள்ள University of
South Verses சேர்ந்த ஆராய்ச்சி குழுவும் இணைந்து தான் இந்த மாத்திரையை
உருவாக்கியுள்ளனர்.
இந்த மாத்திரையை உருவாக்கிய முக்கிய நபராக கருதப்படும்
சிங்களரின் கருத்துப்படி, வயது முதிர்வை இந்த மாத்திரை தடுப்பது மட்டும் இல்லமால்
இந்த மாத்திரை செல்களையும் புத்துயுர் செய்யும் என்பதால் செயல் இழந்த உறுப்புகளை
கூட செயல்பட வைக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் கை கால் செயல்படாமல்
இருக்கும் நபர்கள் கூட இந்த மாத்திரையை பயன்படுத்தும் போது அவர்களால் ஒரு சராசரி வாழ்க்கையை
வாழ முடியும் என்று கூறியுள்ளார் டாக்டர் சிங்களர்.
அது மட்டும் இல்லாமல் இந்த மாத்திரையில் உள்ள கெமிகல்
பற்றியும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சுருக்கமாக N A D என்று சொல்லப்படும் கெமிகல்
தான் இதனுடைய அடிப்படையாக செயல்படுகிறது என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
காரணம் இந்த கெமிகல் தான் மனித உடலுக்கு தேவையான சத்துகளை சுழற்ச்சி செய்யும் தன்மை
உள்ளது என்ற தகவலை முன்வைக்கிறார் டாக்டர் சிங்களர். தற்போதை சூழலில் இந்த மருந்தை
எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் எலிகள் வழக்கத்தைவிட
10 சதவீதம் அதிகமான நாட்களுக்கு உயிர் வாழ்ந்தது
கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் எலிகளுக்கு வயதாவதால் ஏற்படும் முடி உதிரவும் இந்த
மருந்தை உபயோகிக்கும் போது குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை
இன்னும் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்யவில்லை.
ஆனால் இதை கண்டுபிடித்த சிங்களர் முன்னரே
பயன்படுத்த தொடங்கி விட்டார். அதன் விளைவாக 24 வருடங்கள் இளமையாக உணர்வதாக அறிவித்துள்ளார்.
கூடிய விரைவில் மனிதர்களை வைத்தும் இந்த மாத்திரையை பரிசோதித்து பார்க்க உள்ளனர்.
இந்த சோதனை மட்டும் வெற்றி அடைந்தால், 2021ஆம் ஆண்டிலேயே இதை பொது மக்கள் பயன்பாட்டுக்கு
கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது. ஒரு வேலை 2021 ல் மட்டும் இந்த மாத்திரை விற்பனைக்கு
கொண்டுவரபட்டால் இதன் விலை என்னவாக இருக்கும் என்றால் ஒரு மாத்திரையின் விலை 5
டாலராக இருக்கும் என்று கூறுகின்றனர்.
No comments:
Post a Comment