பொதுவாக கரு நாக்கு உள்ளவர்கள் எதாவது கூறினால்
அப்படியே பலிக்கும் என்கிறார்களே அது உண்மையா, நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு
உறுப்புகளுக்கும் வெவ்வேறு விதமான தன்மைகளில் இருகின்றன. உறுப்புகளின் நிஜமான
தன்மைக்கும், அவற்றின் மாறுதலான தன்மைக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளது. ஒவ்வொரு
உறுப்புகளும் வெவ்வேறு நிறங்களில் ஆச்சரியமூட்டும் தகவல்களை கொடுக்கும். அந்த
வகையில் நமது நாக்கும் அடங்கும்.
நாம் பலவகையான நாக்குகளை பார்த்திருக்கலாம்.
ஒவ்வொருவருக்கும் தனிவிதமான நாக்குகள் இருக்கும். கரு நாக்கு, pink நாக்கு, வெள்ளை
நாக்கு, சிவப்பு நாக்கு என்று பலவிதமான வண்ணங்களில் நாக்கு இருக்கும். இந்த ஒவ்வொரு விதமான
நிறங்களும் உங்களை பற்றி என்ன கூருகின்றது என்று தெரியுமா?
மனிதனுடைய நாக்கானது உயிருள்ள ஜீவ ராசிகளை
அளிக்க கூடிய வல்லமை பெற்றது. ஒரு சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதால் இன்று
எத்தனையோ குடும்பங்கள் பிரிந்து இருக்கிறது. திருவள்ளுவர் கூட நாவடக்கம் வேண்டும்
என்று தனது குரலில் கூட கூறியிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். எனவே
நாக்கிற்கு என்று தனித்தன்மைகள் உண்டு.
உங்களது நாக்கு பிளந்தது போன்று இருந்தால்,
உங்களது உடல் வயதானவர்கள் போல் தோற்றம் தரபோகிறது என்று அர்த்தம். மேலும் ஏதேனும்
தொற்றுகளாலும் இப்படி இருக்கலாம். செக்க சிவந்த strawberry பழம் போல் இருந்தால், அதனை சாதரணமாக எடுத்துக்
கொள்ள கூடாது. இந்த நிறம் உடலில் இரும்பு சத்து, விட்டமின் B சத்து குறைவாக
இருப்பதை காட்டுகிறது. ஒரு சில நேரங்களில் இந்த நிறம் கொண்ட நாக்கு காரர்களுக்கு
கொஞ்சம் காரமாக சாப்பிட்டாலோ, அல்லது அதிக சூடாக சாப்பிட்டாலோ, நாக்கில் வலி
ஏற்படும். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகவேண்டும்.
நாக்கு வெள்ளையாக இருக்கிறது என்றால் சுத்தமாக
இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். இது ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்பட்ட பாதிப்பு தான்.
ஆரம்பத்தில் குறைந்த அளவில் இருந்து பின் மிக அதிகமாக நாக்கு முழுக்க பரவ
தொடங்கும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், மாத்திரைகளை அதிகமாக
எடுத்து கொள்ளுதல், சர்க்கரை நோய் ஆகிய காரணங்களால் கூட இப்படி ஏற்படலாம்.
பொதுவாக கரு நாக்கு உள்ளவர்கள் எதை கூறினாலும்
நடக்கும் என்ற மூடநம்பிக்கை பலரிடம் இருக்கிறது. ஆனால், இது முற்றிலும் தவறான
கருத்து. இது ஒருவகையான பாக்ரிடியாவால் கருப்பு நிறத்தை அடைகிறது. இப்படி இருப்பவர்களுக்கு
வாயில் துர்நாற்றம் ஏற்படும்.
No comments:
Post a Comment