Saturday, 1 May 2021

எந்த உணவுகள் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் ?

 

     உலகம் முழுவதும் பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு தீர்வு கிடைக்குமா என உலக மக்கள் ஒவ்வொருவரும் தேடுதலில் இறங்கிவிட்டார்கள். அந்த வரிசையில், உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் உணவுகள் என்ற தலைப்பு இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகிறது. ஆனால் வெறும் உணவுகளால் மட்டும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க முடியுமா, நோய் எதிர்ப்பு திறனால் மட்டும் தப்பித்துவிட முடியுமா என இது போன்ற கேள்விகளுக்கு நிபுணர்கள் அளித்துள்ள விளங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

     நோய் எதிப்பு திறன் குறைவாக உள்ளவர்கலேயே கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் என கூறப்பட்டதும், பலரும் போட்டி போட்டுகொண்டு இந்த உணவு நோய் எதிர்ப்பு திறனை வலுபடுத்தும், அந்த பானம்  நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்தும் என ஆலோசனைகளை அழித்துவருகிறனர். ஆனால் உண்மையிலேயே, நோய் எதிர்ப்பு திறன் என்பது வெறும் உணவை மட்டும் சார்ந்தது அல்ல என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

 

நோய் எதிர்ப்பு திறனை நாமாக உருவாக்க முடியுமா ?   மாத்திரைகள், சத்து பானங்கள், உடல்நல பழக்கங்கள் ஆகியவற்றின் மூலம் எதிர்ப்பு திறனை வளர்த்துவிட முடியும் என்பது மூட நம்பிக்கை. ஏதாவது ஒரு கிருமி மனிதனின் தோள், காற்றோட்ட பாதைகள் ஆகிய தடுப்புகளை தாண்டி உடலுக்குள் நுழைந்துவிட்டால், முதலில் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு எதிர்வினை தூண்டப்பட்டு, அவை அந்த கிருமியை அளிக்க போராடும். ஆனால் அவற்றால் அந்த கிருமியை அளிக்க முடியவில்லை என்றால், அடுத்தகட்டமாக ஆண்டிபாடிகளை, நமது நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாக்கும். இந்த ஆண்டி-பாடிகள், குறிப்பிட்ட கிருமிகளை மட்டுமே தாக்கும். அதாவது இன்புளுயன்சா வைரஸ்களை தாக்கும் ஆண்டிபாடிகள் கொரோனா வைரசை தாக்காது என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் இந்த ஆண்டிபாடிகளால் கூட சிலவைரஸ்களை அளிக்க முடியாமல் போகலாம். அப்போதுதான் தடுப்புசிகளால் உருவாக்கபட்ட ஆண்டிபாடிகளின் உதவி நமக்கு தேவைபடுகிறது. அதென்ன தடுப்பு மருந்துகள் மூலம் உருவாகும் ஆண்டிபாடிகள் என நீங்கள் குழப்பம் அடையலாம். அதற்கு நீங்கள் முதலில் தடுப்பூசிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

 

தடுப்பூசிகள் என்றால் என்ன ? பலர் நினைப்பது போல தடுப்பூசி மருந்துகளில்,  கிருமிகளை அளிப்பதற்கான மருந்துகள் எதுவும் இருக்காது. அதற்கு பதிலாக வலிமை இழந்த அல்லது இறந்து போன கிருமியோ, அல்லது அதன் ஒரு பகுதியோ மனித உடலுக்குள் செலுத்தப்படும். இப்படி செலுத்தப்படும் போது. ஏதோ ஒரு எதிரி உடலுக்குள் நுழைந்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ளும் நமது நோய் எதிர்ப்பு மண்டலம். அது என்ன வகையான கிருமிகள் என அடையாளம் கண்டுகொண்டு அதை அளிக்கும் வீரியம் கொண்ட ஆண்டிபாடிகளை உடலுக்குள் உருவாக்கும். இதனால் எதிர்காலத்தில் அந்த உடலுக்கு அந்த குறிப்பிட்ட கிருமிகளின் தொற்று ஏற்பட்டால் கூட ஏற்கனவே தடுப்பூசி காரணமாக உடலில் உருவாக்கி இருக்கும் ஆண்டிபாடிகள் அந்த கிருமிகளை அழித்துவிடும். இதே நடைமுறையில் தான் கொரானா தடுப்பூசியிலும் பயன்படுத்தப்படும். ஆனால் குறிப்பிட்ட கிருமிகள் தொடர்பான உருவாக்கப்பட்ட தடுப்பூசி மூலம் உருவான ஆண்டிபாடிகள் வேறு ஒரு கிருமியை எதிர்த்து போராடாது. அதனால் தான் ஒவ்வொரு கிருமிக்கும் தனித்தனியே தடுப்பூசிகள் போடபடுகின்றன. எனவே செயற்கையாக, அதாவது குறிப்பிட்ட பானம் உணவுகள் மூலம் நம்மால் நோய் எதிர்ப்பு திறனை வலுபடுத்தவோ, அதிகரிக்கவோ முடியாது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது முழுக்க நோய் எதிர்ப்பு மண்டலம் சார்ந்தது. 

 


வைட்டமின் மாத்திரைகள் பலன் தருமா? மல்டி வைட்டமின்கள் மாத்திரைகள் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு உதவும் என பலர் கூறுகிறார்கள். ஆனால் ஏற்கனவே நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களுக்கு எந்த வைட்டமின் மருந்தும் வேலை செய்யாது. மாறாக அது ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்து உள்ளது. எனவே வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு மட்டுமே வைட்டமின் மாத்திரைகள் பலன் தரும் என இகாசகி கூருகிறார். தற்போதைய சூழலில் பலரும் வீட்டில் முடங்கி கிடப்பதால் சூரியன் வெளிச்சம் உடலில் படாத காரணத்தினாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் அதற்கான மாத்திரைகளை எடுத்துகொள்ளலாம். 

 

புரோபயாடிக்ஸ் உதவுமா ? புரோபயாடிக்ஸ் என்பது சிலவகை உணவு, பானங்கள், மாத்திரைகள் ஆகியவற்றில் அடங்கியுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை குறிக்கும். ஆனால், இந்த நுண்ணுயிரிகள் எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்களை கூட குணபடுத்தும் என பொய்கள் உலா வருகின்றன. ஆனால் மேல் சுவாச பாதைகளில் ஏற்பட்டுள்ள தொற்றுகளை குறைக்க புரோபயாடிக்ஸ் உதவுவதாக 2015 ல் வெளியான ஆய்வு ஓன்று தெரிவிக்கிறது. முக்கியமாக கொரோனா வைரஸ்க்கு எதிராக எந்த வகை புரோபயாடிஸ்க்கும் பாதுகாப்பு வழங்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. 

 

என்னதான் தீர்வு ? நோய் எதிர்ப்பு திறனை வளர்ப்பது தொடர்பான நம்பிக்கைகள் தீங்கு விளைவிக்காதவை என்பதில் கொஞ்சம் நிம்மதி கொள்ளலாம். ஆனால் இதை நம்பினால், ஒரு போலியான பாதுகாப்பு உணர்வு ஏற்படும் என்பது தான் இதில் இருக்கும் ஆபத்து. போதிய தூக்கம், உடற்பயிற்சி, சரிவிகித உணவு மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துகொள்வது ஆகியவற்றை பின்பற்றினாலே உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட தொடங்கிவிடும். இது தவிர எந்தவித பெருந்தொற்று நோயிடம் இருந்து நம்மை பாதுகாக்க இருக்கும் ஒரே வழி தடுப்பு மருந்து தான்.

No comments:

Post a Comment