50 சதவீதம் இறப்பு வீகிதத்தை கொண்ட இந்த பூஞ்சை தீவிர கோவிட்-19 நோயாளிகளிடம் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சையான ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டால் தூண்டப்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஸ்டீராய்டுகள் கோவிட்-19 நோயாளிகளின் நுரையிரல்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து கொரானா வைரஸை எதிரித்து போராட, உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் செயல்படும்போது ஏற்படக்கூடிய, சில சேதங்களை தடுக்க உதவுகிறது. ஆனால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து டையபெடிஸ் நோயாளிகள் மற்றும் டையபெடிஸ் அல்லாத கோவிட்-19 நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சியே மியுகோர் மைக்ரோ சிஸ் என்ற நிலைக்கு காரணமாக இருக்கலாம் என கருதபடுகிறது.
டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய 5 நகரங்களில் உள்ள, அவருடன் பணி புரியும் ஆறு மருத்துவர்கள் இத்தகைய தொற்று 58 பேருக்கு பதிவாகியுள்ளதாக கூறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கோவிட்-19 ல் இருந்து மீண்ட 12 முதல் 15 நாட்களுக்குள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பையில் பரபரப்பாக செயல்படும் சியோன் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களில் 24 பூஞ்சை தொற்று நோயாளிகள் கண்டறியபட்ட்ன. முன்னர் இது ஓர் ஆண்டுக்கு 6 என்ற அளவில் தான் இருந்தது என மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் ரேணுகா பிராடு தெரிவித்துள்ளார். அவர்களில் 11 பேர் ஒரு கண்ணை இழந்ததாகவும், 6 பேர் உயிரையே இழந்ததாகவும் அவர் கூறுகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பையில் 10க்கும் குறைவான தொற்றுகளே பதிவான நிலையில் இந்த ஆண்டு நிலைமையே வேறு என்கிறார். டாக்டர் நாயர். பெங்களூர் டாக்டர் ரகுராஜ், இந்த தொற்று ஆண்டுக்கு 1 அல்லது 2 க்கு மேல் பதிவாகவில்லை என கூறுகிறார். பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவாக மூக்கடைப்பு மற்றும் மூக்கில் ரத்தம் வழிதல், வீக்கம், கண்ணில் வலி, கண் இமை இரக்கம் போன்ற அறிகுறியுடன் தொடங்கி, பார்வை மங்குதல் முதல் பார்வை இழப்பு வரை வருகிறது. மூக்கை சுற்றி தோளில் கருப்பு திட்டு தோன்றலாம், மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளில் பெரும்பாலனோர் பார்வை இழப்பு துவங்கியவுடன் தான் வருகிறார்கள் எனவும், அந்த தொற்று மூளைக்கு பரவாமல் தடுக்க, கண்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். சில சந்தர்பங்களில் நோயாளிகள் இரு கண்களின் பார்வையை இழந்து விடுவதாகவும்.
சில அறிய சந்தர்பங்களில் நோய் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் தாடை எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டி இருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே மருந்து, ஒரு டோஸ் 3,500 ரூபாய். இதை தினமும் 8 வாரங்களுக்கு அன்றாடம் நரம்பில் செலுத்த வேண்டும். இது ஓன்று தான் பூஞ்சை தொற்றுக்கு எதிராக பலன் அளிக்க கூடியதாக் இருக்கும் என கூறுகிறார்கள் மருத்துவர்கள். கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையின் போதும் சிகிச்சைக்கு பிறகும் சரியான அளவில் ஸ்டீராய்டுகள், சரியான காலத்துக்கு வழங்கபடுவதை உறதி செய்வதே பூஞ்சை தொற்று நோயை தடுப்பது ஒரு வழியாகும் என மும்பையை சேர்ந்த சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ராகுல் பாக்ஸி கூறுகிறார்.
கடந்த ஆண்டில் கோவிட்-19 ஆள் பாதிக்கப்பட்ட சுமார் 800 சர்க்கரை நோயாளிகளுக்கு தாம் சிகிச்சை அளித்ததாகும், அவர்களில் எவருக்கும் பூஞ்சை தொற்று ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். நோயாளிகள் குணமாகி வீடு திரும்பிய பிறகும் மருத்துவர்கள் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் பாக்ஸி கூறுகிறார். இது மிகப்பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், இது தொடர்ந்து நாடு முழுவதும் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன என்பதை கூறமுடியவில்லை என ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவிக்கிறார். இது திரிவு வைரஸாக தோன்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கிறது. மேலும் இதில் மிகவும் அதிகமாக இளம் வயதுடையவர்களை தான் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment