Sunday, 30 May 2021

கொத்து கொத்தாக குவியும் சடலங்கள்



     பிரயாக் ராஜ் கங்கை கரையில் சில இடங்களில், மணலில் புதைக்கப்பட்ட 100 கணக்கான சடலங்களின் படங்களும், வீடியோகளும், தேசிய அளவிலும், உலக அளவிலும் விவாத பொருளாக ஆனபோது, இந்த நூற்றுக்கணக்கான மரணங்கள் குறித்து கேள்விகள் எழுப்பட்டன. 

     கடந்த வாரம் இது குறித்து பதில் அளித்த உத்திரபிரதேச அமைச்சர் மகேந்திர பிரதாப் சிங், இது பிரயாக் ராஜின் பழமையான பாரம்பரியம் என்று கூறுகிறார். கடந்த இரண்டு மாதங்களில், பிரயாக் ராஜ்ஜில் உள்ள ஸ்ரிங்க்பூர் அருகே கங்கைக்கு மிக அருகில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு சடலங்கள் புதைக்கப்பட்டன. இந்த சடலங்கள் மீது போர்த்தபட்டு இருந்த துணியும், சில இடங்களில் இறந்தவர்களின் உடல் பாகங்களும் கூட வெளியில் தெரியும் அளவுக்கு அவசரமாக இவை புதைக்கப்பட்டு இருந்தன. இந்த உடல் பாகங்களை இறையாக உட்கொள்ள, விலங்குகளும், கழுகுகளும், காகங்களும் சுற்றி சுற்றி வந்தன.

     அதற்கு முன்னர் கங்கை மற்றும் யமுனை நதிகளில் ஏராளமான சடலங்கள் மிதந்து கிடந்தன. கிராமங்களில் இவ்வளவு பெரிய எண்ணிகையிலான இறப்புகள் எதனால் நிகழ்ந்தன என்பதும், இவை எந்தந்த கிராமங்களை சேர்ந்தவர்களின் சடலங்கள் என்பதிலும், இப்போது வரை மர்மம் நிலவி வருகிறது. இந்த சடலங்கள் கண்டுபிடிக்கபடவில்லை என்றும் மக்கள் தாமாக முன் வந்து புதைதிருகிறார்கள் என்றும், நீண்ட காலமாக மக்கள் இதை செய்து வருகிறார்கள் என்றும் பிரயாக் ராஜ் மாவட்டத்தின் மாஜிஸ்திரேட் பானு சந்திர போஸ் கூறுகிறார். 

 


     சில சமூகங்களில் இது ஒரு பாரம்பரியம். மற்றும் சிலர் பாம்பு கடித்து இறந்த உடல்களை இப்படி தான் அடக்கம் செய்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். பிரயாக் ராஜ்ஜில் உள்ள சில உள்ளூர் செய்தி தாள்கள், 2018 ஆம் ஆண்டில் கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளின் போதே ஸ்ரிங்க்பூரை சுற்றி இதே போன்ற காட்சிகள் காணப்பட்டதாகவும், இது பல முறை நிகழ்துள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் ஒரு விரிவான விசாரணைக்கு பிறகு வட இந்தியாவின் இந்து மதத்தில் உடல்களை இப்படி அடக்கம் செய்யும் பாரம்பரியம் இல்லை என்றே தெரிய வருகிறது. மாறாக அசாதாரணமான சூழ்நிலையில் அல்லது வேறு வழி இல்லாத நிலையில் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று அறியபடுகிறது.

     பிரயாக்ராஜ்ஜில் உள்ள தாரா கஞ்சில் இறுதி சடங்குகள் செய்யும் ப்ரோகிதர் ராஜ்குமார், தகனம் செய்ய வசதி இல்லாதவர்கள் அல்லது இறந்த குழந்தைகளின் உடல்களை கொண்டு வருவோர் தான் அப்படி செய்கின்றனர் என்கிறார். மேலும், இப்படி செய்வோரை பலரை சந்தித்து பேசியதில், பணம் இல்லாததால் தான் இப்படி சடலங்களை மணலில் புதைத்து செல்கின்றனர், யாரும் தங்களது சொந்த விருப்பத்தினாலோ அல்லது பாரம்பரியத்தினாலோ புதைக்கபடுவதில்லை என்று அவர் கூறுகிறார். 

     சுடுகாட்டில் காணப்படும் கூட்டம் மற்றும் விறகுகளின் விலை உயர்ந்தது ஆகிய காரணங்களினால், ஏழை மக்கள் இறந்த உடல்களை அடக்கம் செய்ய தொடங்கியுள்ளனர். கங்கை மணலில் சடலங்கள் புதைக்கபட்டுகொண்டு இருந்தன. ஆனால் இது அறிதாக தான் நடக்கும். எதோ ஒரு கட்டாயத்தின் பேரில் தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று இறுதி சடங்குகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் கூறுகிறார். இது குறித்து சுற்று வட்டார கிராம வாசிகள் பல முறை காவல்துறையில் புகார் செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனவும் கூறபடுகிறது.



     மேலும் பூணூல் அணியபடாதவர்கள் இறந்தால் அவர்களையும் அடக்கம் செய்வது பண்டைய காலத்தில் இருந்தே மரபாக உள்ளது. ஆனால் தற்போது தகனம் செய்வது செலவு அதிகமாகிவிட்டது. பணவசதி இல்லாதவர்கள் சாதாரண மரணத்திலும் வேறு வழி இல்லாமல் புதைக்கின்றனர் என்று கூறுகின்றனர். இந்து சமுதாயத்தில் சில சாதியில் அவர்கள் இறந்த உடல்களை அடக்கம் செய்வது ஒரு பாரம்பரியம் என்று உள்ளூர் வாசிகள் கூறுகிறார்கள். அனால், டாக்டர் மிஸ்ரா இதை முற்றிலும் நிராகரிக்கிறார். இதற்கு சாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை, இதற்கு வறுமை தான் காரணம். பொருளாதார வசதி இல்லாததால், தலித் சமூகத்தினர் முன்பு இப்படி செய்து வந்தார்கள். ஏழைகள் இன்னும் இதை செய்கிறார்கள். அனால், வசதி உள்ளவர்கள் தகனம் மட்டுமே செய்கிறார்கள். 

     ஆனால், அதில் சில விதி விளக்குகள் உள்ளன. துறவிகள் தகனம் செய்யபடுவதில்லை. அவர்களை நீரில் விடுகிறார்கள் அல்லது பூமியில் அடக்கம் செய்கிறார்கள். காரணம் அவர்கள் துறவு மேற்கொள்ளும் முன்பே இறுதி சடங்குகள் செய்விக்கபடுகின்து என்று கூறுகின்றனர். பிரயாக் ராஜில் உள்ள ஒரு மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் 2018, 2019 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளை மேற்கோள் காட்டி, சடலங்களை அடக்கம் செய்வது மரபு என்று கூறுகிறார். ஆனால் பல உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் இத்தனை எண்ணிகையில் உடல்கள் புதைக்கப்படவில்லை என்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் நமாமி கங்கை திட்டத்திற்காக பயணித்தபோது பல இடங்களில், கங்கை கரையில் மணலில் புதைக்கப்பட்ட உடல்கள் பார்த்தேன், நான் அவைகளை புகைப்படங்களும் எடுத்து இருந்தேன். 

     ஆனால் இப்போது இருப்பது போன்ற எண்ணிக்கையில் எப்போதும் இருந்ததில்லை என்று மூத்த புகைப்பட கலைஞர் ராஜேஷ் குமார் சிங் தெரிவிக்கிறார். 2018 ஆம் ஆண்டில் சடலங்கள் கண்டுபிடிக்கபட்டிருந்தால் அது புகைப்பட கலைஞர்கள் கண்களில் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால் அது நடக்கவில்லை. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உடல்கள் அடக்கம் செய்யபடுவதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால், கடந்த ஒன்றரை மாதத்தில் COVID, மற்றும் பிற நோய்கள் இருந்தது என்பது தான் உள்ளூர் மக்களின் கருத்து. 

    மூத்த புகைப்படக் கலைஞரான SK ராவ், 2018 ஆம் ஆண்டு இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சடலங்களின் அடக்கம் பற்றியோ அல்லது அவற்றின் படங்கள், ஊடகங்களில் வெளியானது பற்றியோ அறிந்திருக்கவில்லை. கங்கை கரையில் கல்லைறை போன்ற ஒரு காட்சி என்பது சாதரான விசயமில்லை. இது போன்று விஷயம் நடந்து அவை ஊடகங்களில் வராமல் இருப்பது என்பது அசாத்தியம், இப்போது இது போன்ற படங்கள் வருகின்றன என்றால், நிச்சயமாக இவற்றை சரிபார்க்க வேண்டும். அவை எந்த காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று கண்டறியவேண்டும். இப்போதெல்லாம் இது மொபைலில் இருந்து எடுக்கபட்டாலும், கேமராவில் இருந்து எடுக்கபட்டாலும் அதன் முழு விவரங்களையும் அறிய முடியும் என்பதே உண்மை.

No comments:

Post a Comment