Sunday, 26 June 2022

உஷார் மக்களே - காபி மேக்கர் மூலம் ஒட்டு கேட்கும் சீனா

      அறிவியல் வளர்ச்சியால் ஒரு நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும் முடியும், நாட்டின் பாதுகாப்பை சிதைக்கவும் முடியும் என்பதை உணர்த்திய ஆயுதம் தான் இந்த சைபர் தாக்குதல். இதை கொண்டு அடுத்த நாட்டின் எல்லைக்குள் நுழையாமலே அந்த நாட்டை நமது கட்டுக்குள் கொண்டு வரவும் முடியும். எதிரி நாட்டுடன் போரிடவும் முடியும், மொத்தத்தில் நவீன உலகத்தில் கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் தொழில் நுட்பம் தான் இந்த சைபர் தாக்குதல். தற்போது நடைபெறும் உக்ரைன் ரஷ்யா போரில் கூட, தனது சைபர் தாக்குதலை ரஷ்யா கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. 

சைபர் தாக்குதல் என்பது ரஷ்யாவிற்கு கை தேர்ந்த கலை என்பது பலரும் அறிந்த விஷயம் தான். அதனால் தான் அமேரிக்கா கூட தங்கள் நாட்டின் மீது ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தியதாக அடிக்கடி குற்றம் சாட்டுகிறது. இந்த வரிசையில் தற்போது சீனாவும், சீனாவில் தயாராகும் ஸ்மார்ட் காப்பி மேக்கர்கள் மூலம் பிற நாட்டில் உள்ள தகவல்களை திருட்டு தனமாக சேகரிப்பதாகவும், அவர்கள் பேசுவது ஒட்டு கேட்கபடுவதாகவும், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் ப்லேடின் கண்டுபிடித்திருப்பது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

 

      பொருட்களை இணையத்துடன் இணைக்கும் IOT என்னும் software கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன இந்த ஸ்மார்ட் காபி மேக்கர்கள். இப்படி சாதாரண மக்கள் பேசுவதையும் அவர்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து சீனா என்ன செய்ய போகிறது என்று தானே யோசிகிறீர்கள். உங்கள் வங்கி கணக்கு உங்களுக்கு சொந்தமான கம்பெனி ஆகியவற்றை சைபர் தாக்குதல் மூலம் சூறையாட முடியும். மேலும் உங்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை, நாட்டுக்கு எதிராகவே திருப்பி விடவும் முடியும். அவர்கள் நாட்டில் இருந்து கொண்டே பிற நாட்டு கணினிகளை செயலிழக்க செய்து வங்கி மற்றும் அரசு செயல்பாடுகள் அனைத்தையும் முடக்க முடியும். 


      தொலைபேசி சேவை, இணைய வசதி முடக்கம். மின்வெட்டு போன்றவை கூட ஏற்படுத்த முடியும் என்றால் பார்த்து கொள்ளுங்கள். காபி மேக்கர் மட்டுமல்ல. இதே போல் MADE IN CHINA என பல பொருட்கள் மூலம் சைபர் தாக்குதலுக்கு ஆயுதமாக பயன்படுத்த படலாம் எனவும், குறிப்பாக அமெரிக்கர்களை குறி வைத்தே, சீனா இந்த காயை நகர்த்தி வருவதாகவும், அமெரிக்க ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை இதற்காக ஒத்துழைக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருப்பது நம்மை அதிரிச்சியில் ஆழ்த்தியுள்ளது.


      ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடு காரணமாக தான் இந்தியாவில் சீனாவின் செயலிகளான TIKTOK உள்ளிட்டவைகள் தடை செய்யபட்டிருந்தன. தற்போது காபி மேக்கர்கள் மூலம். சீனா ஒட்டு கேட்டும் செயலில் ஈடுபட்டிருக்கும் தகவல் இந்தியாவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

No comments:

Post a Comment