Sunday, 19 June 2022

SEX ON THE MOON - 21ம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம்

 


     SEX ON THE MOON நிலாவில் செக்ஸ் இந்த தலைப்புடன் 2011 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி உலகமெங்கும் விற்பனைக்கு வந்த புத்தகம் தான் இந்த SEX ON THE MOON.

     2௦௦2 ஆம் ஆண்டு தாட் ராபர்ட்ஸ் என்ற 25 வயது வாலிபர் டெக்சாசில் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஒரு காதலியும் இருந்தார். அந்த காதலியிடம் எல்லா காதலர்களையும் போலவே யாரும் கொடுக்காத ஒரு பரிசை கொடுப்பதாக உறுதி அளித்தார். இவர் தனது காதலிக்கு பரிசு அளிப்பதாக சொன்னது நிலாவை தான். சொன்னதோடு மட்டும் இல்லாமல் தன் காதலிக்கு எப்படியாவது நிலவை பரிசாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே சுற்றி வந்தார்.

      இதன் விளைவாக நாசாவில் மிக மிக பத்திரமாக பாதுகாத்து வந்த நிலாவின் கற்களை சுமார் 17 பவுண்டுகள் எடையளவு எடுத்து வந்து விட்டார். நிலாவில் இருந்து இந்த கற்கள் அப்பலோ விண்வெளி வீரர்களால் பூமிக்கு கொண்டு வரப்பட்டவை. இந்த நிலா கற்களை காதலியிடம் சொன்னது போலவே பரிசாக கொடுத்ததோடு மட்டுமில்லாமல், படுக்கையில் நிலா கற்களை பரப்பி, பிறகு செக்ஸ் உறவும் வைத்து கொண்டார். மனித குல சரித்திரத்தில் இப்படி நிலவின் கற்கள் சூழ சல்லாபம் செய்த ஒரே மனிதர் இவர்தான்.

     தன் காதலியும் மற்றும் ஒரு நண்பரையும் சேர்த்து கொண்டு, இவர் யாரும் உடைத்து உள் புகமுடியாத ஒரு லாபரட்டரியில் பாதுகாக்கப்பட்டு வந்த நிலவின் கற்களை எடுத்து வர திட்டம் தீட்டினர். ஏராளமான பாதுகாப்பு எல்லைகள் எனப்படும் செக்யுரிட்டு பாய்ண்ட்ஸ் முதலில் கடக்கப்பட வேண்டும். பின்னர் எலெக்ட்ரானிக்ஸ் லாக் அதாவது மின்னணு முறையில் இயங்கும் அதி நவீன பூட்டை திறக்க வேண்டும். அதனுடைய கோட் அதாவது குறியீடை அறிந்து செயல்பட வேண்டும். ஆங்காங்கே பொருத்தபட்டிருக்கும் காமராக்களின் பார்வையில் படாமல் நிலா கற்களை கடத்தி எடுத்து வர வேண்டும். இது  என்ன ஹாலிவுட் திரைப்படமான ஓஷன் லெவன் சினிமா மாதிரி அப்படியே இருக்கிறது என்ற எண்ணம் வருகிறது அல்லவா!

     நடந்தது என்னமோ உண்மை தான் இவை அனைத்தையும் மீறி ராபர்ட்ஸ் நிலா கற்களை திட்டம் தீட்டியபடி கடத்தி விட்டார். பின்னர் படுக்கை அறையில் உள்ள படுக்கையில் பரப்பி தனது காதலியுடன் செக்ஸ் உறவும் வைத்து கொண்டார். ஆனால் இவர் மாட்டி கொண்ட விதம் தான் மிகவும் சோகமானது. நிலாவின் கற்களை காதலிக்கு கொடுத்தது மட்டும் இல்லாமல் அதை ஆன்லைனில் விற்க முயன்ற போதுதான் நாசா விளித்துக் கொண்டது. பிறகு ராபர்ட்ஸ் கைது செய்யபட்டார். அவருக்கு தண்டனையாக 100 மாதங்கள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. 


      விண்வெளி வீரராக ஜொலிக்க வேண்டிய ஒரு அபாரமான அறிவுடையவர் காதலுக்காக இந்த திருட்டைச் செய்து சிறையில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டி நேர்ந்தது. ஆனால் சிறையில் அவர் சும்மா இருக்கவில்லை. தனது அறிவை கூர்மை தீட்டினார். ஒரு புதிய இயற்பியல் கொள்கையை கண்டுபிடித்தார். க்வாண்டம் பிசிக்ஸும் ஐன்ஸ்டீனின் ஒப்புமை தத்துவமும் (ரிலேடிவிடி) ஒருங்கிணைக்கப்பட்டு க்வாண்டம் ஸ்பேஸ் தியரி என்ற புதிய கொள்கையை ஒன்றை அவர் உருவாக்கினார். 

     சிறையில் இருந்த காலத்தில் 700 பக்கத்தில் அவர் எழுதியுள்ள ஆராய்ச்சி குறிப்புகள் இயற்பியலில் ஒரு புதிய பார்வையைக் காண வழி வகுத்திருகிறது. தனது அனுபவங்களை பிரபல எழுத்தாளரான பென் மெஸ்ரிச்சை சந்தித்து அவர் கூறினார். தி ஆக்சிடென்டல் பில்லியனர்ஸ் உள்ளிட்ட பரபரப்பான புத்தகங்களை எழுதி உலகின் கவனத்தை கவர்ந்த அற்புத எழுத்தாளரான மெர்சிச் இவர் கதையை கேட்டு அசந்து போனார். உடனடியாக ஆயிரக்கணக்கான கோர்ட் ஆவணங்களை படித்தார். எப் பி ஐ மற்றும் நாசாவின் ஆவணகளை வாங்கிப் படித்து இந்த குற்றளில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்தார். காதல், சாகசம், புத்தி கூர்மை, ஆக்ஷன், த்ரில் என அனைத்தும் கூடிய இந்த உண்மை சம்பவம் ஒரு ஹாலிவுட் திரைப்படம் போலவே சகல அம்சங்களையும் கொண்டிருப்பதை கவனத்தில் வைத்து அற்புதமான ஒரு நாவல் போன்ற ஒரு உண்மை கதையை எழுதினார். அதற்கு SEX ON THE MOON என்ற பெயரையும் வைத்தார். அந்த புத்தகம் தான் இப்போதும் சக்கைபோடு போடுகிறது. சோனிக் பிக்சர்ஸ் இதை திரைப்படமாக்கும் உரிமையையும் வாங்கியுள்ளது. படத்தின் பெயரும் அதே தான். SEX ON THE MOON படம் வெளி வந்தால் உலகமெங்கும் மீண்டும் ஒரு பரபரப்பு உண்டாகும் என்பது மட்டும் நிச்சயமான உண்மை.

     "ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு. என் கனவை நான் நனவாக்கிக் கொண்டேன்" என்கிறார் ராபர்ட்ஸ். தனது புதிய கொள்கையான க்வாண்டம் ஸ்பேஸ் தியரி ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும் அதை சீர்படுத்தி முழுக் கொள்கையாக ஆக்கி அதை நிருபிக்க முயல்வதாகவும் அவர் கூறுகிறார். இந்த கொள்கை மட்டும் உண்மையானது என்று நிருபிக்கபட்டால் ஸ்பேஸ் - டைம் அதாவது காலமும் வெளியும் பற்றிய பல அற்புத உண்மைகள் வெளியாகும்.!

காதலிக்காக நிலா கற்களை கடத்தி சாதனை படைத்த ஒரே ஒரு அபூர்வ மனிதர் ராபார்ட்ஸ் மட்டும் தான்.

1 comment:

  1. Competition is fierce amongst on-line casinos, and the onus is on them to supply beneficiant welcome bonuses to stand out. Our top-rated sites all provide dedicated promos and bonuses for his or her roulette games, together with particular stay roulette bonuses. The French Roulette wheel and table structure have a single Zero sector. The 카지노사이트 logic behind the roulette wheel makes it mainly identical to the European Roulette wheel, but the arrangement of the surface bets on the table is sort of} fully totally different.

    ReplyDelete