இரவு நேரத்தில் 0.3 மில்லி மீட்டர் நீளமுள்ள இந்த ஒட்டுண்ணிகள் தோலின் துளைகளை விட்டு வெளியேறி புதிய தோல் நுண் குழாயை கண்டுபிடித்து தங்களுக்கான இணைகளை தேடி அதனுடன் உடலுறவும் கொள்கின்றன. இப்படி மனிதர்களின் முகத்தில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிரிகளுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
நம்மில் 90 சதவீதம் மக்கள் இந்த ஒட்டுண்ணிக்கு நமது முகத்தில் இடமளித்து வைத்துள்ளோம். ஏனென்றால் தாய் பால் குடிக்கும் காலத்திலேயே பரவி விடுகிறது. இத்தகைய நெருக்கமான உறவை கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று ஆய்வில் பங்கேற்ற ரீடிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பெரோசி கூறுகிறார்.
அவை மிக சிறியவை ஆனால் அழகானவை, அவை நமது முகத்தில் இருப்பதால் கவலைப்பட ஒன்றும் இல்லை. அவை நமது தோலின் துளைகளை சுத்தம் செய்து அழகாக வைத்திருகின்றது என்கிறார். கவலை படாதீர்கள் உங்களுடன் ஒரு சிறிய உயிரினம் வாழ்வதை நினைத்து. மகிழ்ச்சியாக இருங்கள். அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. அவற்றுடன் நமது உறவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்று இந்த ஆய்வு காட்டுகிறது. ஆனால் இவை எந்த பூச்சி உயிரினத்தை காட்டிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலான மரபணுக்களை கொண்டிருக்கின்றன என்பதை பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருகின்றன. புற ஊதா கதிர்களில் இருந்து தனது உடலை பாதுகாக்கும் மரபணுவை இந்த நுண்ணுயிரிகள் இழந்துவிட்டன. அதனால் அவை இரவில் மட்டுமே செயல்படுகின்றன. அந்த இரவு நேர செயல்பாடு தான் உங்களை நெருட வைக்கும்.
இரவில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது அவைகள் உடலுறவு கொள்வதற்கும் இனபெருக்கம் செய்வதற்காகவும் நமது முகத்தில் உள்ள துளைகளுக்குள் செல்கிறது என்கிறார் பெரொட்டி. ஆமாம் நமது முகத்தில் உள்ள துளைகளை அவைகள் தங்களது படுக்கை அறைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் அவற்றின் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் அந்த ஒட்டுண்ணிகள் நம்மை சார்ந்திருப்பது அதிகரிக்கிறது. அதாவது அவை அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகிறது. அவை அழிந்து போனால நமக்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா.
No comments:
Post a Comment