பொதுவாக ஆண்களைவிட பெண்கள் சராசரியாக 3.6 ஆண்டுகள் அதிக காலம் உயிர் வாழ்வதாக உலக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த வயது வித்தியாசம் இன்னும் அதிகம். (இது சராசரி கணக்கு தான்) இதற்கான காரணங்களை மாஸ்கோ வளர்ச்சி உயிரியல் ஆராய்ச்சி நிலைய நிபுணர் ஒருவர் விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் வருமாறு.
சூழ்நிலைகளை தாங்கும் சக்தி பெண்களிடம் அதிகம் உள்ளது. சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஏற்ப மாறி கொள்ளும் இயல்புள்ள உயிரினம் மட்டும் தான் நிலைத்திருக்க முடியும். மனித உயிரினம் சம்பந்தப்பட்ட வரை, புதிய சூழ்நிலை அம்சங்களை சேகரித்துக் கிரகித்துக் கொள்ளும் பணியை ஆண்பாலார் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த புதிய அம்சங்களை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் பணி பெண்களை சேர்ந்தது.
இவ்வாரு புதுமையின் தாக்கத்தை உணரும் "Sensing" விதத்தில் ஆணின் உடல் அமைப்பு மேன்மையுடையதாக உள்ளது. அதில் ஏற்படும் ஆபத்தை தாங்கும் சக்திக் அதற்கு இல்லை. உதாரணமாக, பெண்களின் தோலை அடுத்து அதிக கொழுப்பு சக்தி படிந்திருப்பதால், குளிரை தாங்கும் ஆற்றல் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம்.
இதே போல், மாரடைப்பு, புற்றுநோய், மனநோய் போன்ற நவீன வியாதிகள் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. மற்றும் மனித இனத்தில் பொதுவாக ஏற்படும் மாறுதல்கள் அனைத்தும் முதலில் ஆண்களிடமே ஏற்படுகின்றன. உதாரணமாக பெண்களை விட ஆண்கள் உயரமாக இருகின்றனர். இதன் விளைவாக மனித இனம் முழுவதன் உயரம் அதிகரித்து வருகிறது.
சூழ்நிலையின் பாதிப்பை சமாளிக்கும் திறனை ஆண் பெற்று இருந்தால், பெண்களை விட அதிக காலம் அவன் உயிர் வாழ்ந்திருக்க முடியும். தர்க்க ரீதியாக பார்த்தால், பெண்ணின் ஆயுட்காலத்தைவிட ஆண்களின் ஆயுட்காலம் தான் அதிகம் இருந்திருக்க வேண்டும். கர்ப்ப வாசம் முதல் பூப்பு எய்வது வரை, ஆண்களை விட பெண்கள் முன்னேறுகின்றார். பிறகு பெண்களின் வளர்ச்சி நின்று விடுகிறது. ஆனால் ஆணின் வளர்ச்சி நிற்பதில்லை. 45-55 வயது வரை தான் ஒரு பெண் இனவிருத்தி செய்ய முடியும், ஆனால் ஆண்களுக்கு 60 முதல் 70 வயது வரை இனவிருத்திக்கான சக்தி உண்டு. எனவே சீக்கிரமாக முதிரும் சீக்கிரமாக உதிரவும் வேண்டும். ஆனால் ஆணின் ஒரு இயல்பான பலவீனம் இங்கே குறுகிடுகிறது.
அதாவது நீரோட்டத்தோடு செல்லாமல் எதிர் நீச்சல் செய்வது ஆண்களின் இயல்பான குணம். இதன் மூலம் ஆண்கள் தனக்கு தானே ஆபத்தை தேடி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment