விவாகரத்து பெற்றபின் ஆண் குழந்தை யாருக்கு சொந்தம் ?
HINDU MINORITY & GUARDIANSHIP ACT 1956 பிரிவு (6)ன் படி ஆண் பிள்ளையோ அல்லது திருமணம் ஆகாத பெண் ஆகிய இருவருக்கும் அவர்களது உடல், வாழ்க்கை, சொத்துகள் அனைத்துக்கும் தந்தை தான் காப்பாளராக இருக்க முடியும். அவருக்கு பிறகு தான் தாய். ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ ஐந்து வயது வரை தாயின் அரவணைப்பில் இருப்பது சிறந்தது. இது பொறுப்பு மட்டுமே தவிர காப்பாளர் என்று உரிமை கோர முடியாது.
ஒருவேளை தந்தை மனநிலை சரியில்லாதவராக இருந்தால் கூட, தாய் தானாக பொறுப்பேற்கும் காப்பாளராக இருக்க முடியாது. அவர் தன்னை காப்பாளராக நியமிக்க கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் சட்டத்திற்கு எதிர்மாறாக பிறந்த குழந்தைகள் என்றால், தாய் தான் காப்பாளராக இருக்க முடியும். அதன் பிறகு தான் தந்தை.
ஆனால் சமீப காலத்தில் தாய், தந்தை இருவரில், குழந்தை யாரிடம் வளர்ந்தால் பாதுகாப்பு என்பதை ஆய்வு செய்து அவரிடம் குழந்தை ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வருகிறன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment