நாம் காதலிப்பவர்களின் பெயர்களை பச்சை குத்தி கொள்வது, அப்பா அம்மா பெயர்களை பச்சை குத்திகொள்வது, நமக்கு புடித்த வேலையை பற்றி பச்சை குத்தி கொள்வது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் பண்டைய காலத்தில் பச்சை குத்திக்கொள்வது ஒரு கலாச்சாரமாகவே இருந்து வந்தது. திருமணம் ஆன ஒரு நபரை அடையாளபடுத்த மணமக்களின் உடம்பில் பச்சை குத்தப்பட்டது. மற்றும் சில பேர் அவர்களின் சாதியை அடையாளபடுத்துவது போலவும் பச்சை குத்திக்கொண்டனர்.
5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மம்மியின் உடம்பில் 57 இடங்களில் பச்சை குத்தபட்டிருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது தான் உலகின் மிகவும் பழமையான TATTOO என்று அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒருவகையான கறிபொடி மற்றும் தாய்பால் வைத்து ஒரு கூர்மையான கம்பி மூலமாகவோ அல்லது இறந்த மனிதர்களின் எலும்புகளை வைத்தும் பச்சை குத்தி வந்தார்கள்.
நாம் பச்சை குத்திகொள்வது என முடிவு எடுத்து விட்டால், முதலில் கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு நல்ல திறமையான பச்சை குத்தும் நபரை தேர்ந்தெடுத்து, பச்சை குத்திகொள்ள வேண்டும். ஏனென்றால், திறமை இல்லாத நபரிடம் சென்றால் பச்சை குத்தும் பொழுது ரத்த கசிவு ஏறட வாய்ப்பு உள்ளது. மற்றும் அந்த நபர் பச்சை குத்த பயன்படும் கூர்மையான ஊசியை, பச்சை குத்தும் முன் மாற்றுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல், அவர்கள் பயன்படுத்தும் கையுறை, மை வைக்க பயன்படும் கிண்ணம் இவை அனைத்தும் ஒரு முறை தான் பயன்படுத்துகிறார்களா என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். பச்சை குத்திகொண்ட பிறகு கிருமி நாசினி சோப் மூலம், பச்சை குத்திகொண்ட இடத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.
இந்த மாதிரி பச்சை குத்திகொண்டால் அரசாங்க வேலை கிடைக்குமா என்று கேட்டால், அந்த மாதிரி எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. ஆனால் எந்த இடத்தில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று விதிமுறை உள்ளது. INDIAN ARMY, NAVY மற்றும் AIR FORCE யை சேர்ந்தவர்கள், கை முட்டியில் இருந்து மணி கட்டு வரை மட்டும் தான் பச்சை குத்த வேண்டும். அதிலும் முக்கியமாக எந்த ஒரு மதத்தையும் தரக்குறைவாக பதிவு செய்ய கூடாது. அதேமாதிரி IPS மற்றும் IAS போன்ற பணிக்கு செல்ல முயற்சி செய்பவர்கள் உடம்பில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் பச்சை குத்தி கொள்ளலாம், ஆனால் அது வெளியே தெரியும்படியாக இருந்தால், அதை பற்றி நேர்காணலில் கேள்வி கேட்க வாய்ப்பு உள்ளது. காவல் துறையில் சேர விருப்பம் உள்ளவர்களும் பச்சை குத்தி கொள்ளலாம், ஆனால் காவல் துறையில் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை கவனிப்பார்கள், இதன் மூலம் நீங்கள் ஒழுக்கமான நபர் தானா என்பதை கண்காணிப்பார்கள்.
பச்சை குத்தி கொண்டால் ரத்த தானம் செய்யலாமா என்பதை பற்றி சிலருக்கு சந்தேகம் வரலாம். தாரளாமாக ரத்தம் கொடுக்கலாம், அனால், பச்சை குத்திகொண்ட நாளில் இருந்து 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை ரத்தம் கொடுக்க கூடாது. இந்த கால அளவு ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் மாறுபடக்கூடும். கொடுக்கவே கூடாது என்றெல்லாம் கிடையாது.
No comments:
Post a Comment